பேரன்பின் படப்பிடிப்பு வரும் 8ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலையில் நீரோடு கிடக்கும் பள்ளத்தாக்கில் அதிகாலை 5 மணி அளவில் தொடங்குகிறது.
ஏரிக்கு அருகே ஒரு வீட்டை நிஜம் போலவே நிறுவி முடித்திருக்கிறார், கலை இயக்குநர் குமார் கங்கப்பன்..
உடைகளைத் தேடித்திரிந்து எடுத்துத் திருத்தி, பழையதாக்கி என எல்லாம் முடித்துப் பெட்டியில் அடுக்கிவிட்டார், உடை வடிவமைப்பாளர் வீணா சங்கர நாராயணன்.
கடந்தப் பத்து நாட்களும் சிறிதே உறங்கி பெரிதே உழைக்கும் என் உதவி இயக்குநர்கள் இன்று இரவும் பணியில் ஆழ்ந்து இருக்கிறார்கள்..
தங்கமீன்கள் “செல்லம்மா”, பேரன்பின் ”பாப்பாவாக” நாளை கொடைக்கானல் கிளம்புகிறாள்.
ஒரு லாரி பொருட்கள் எங்கள் அலுவலகத்தில் இருந்து
ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் தங்கள் பெரும் பயணத்தைத் தொடங்கின..
இவற்றோடு எங்களைப் பரவசப்படுத்திய, படுத்திக் கொண்டிருக்கிற பேரன்பின் முதல் பாடலை யுவன் தந்து இரண்டு மணி நேரமே ஆகி இருக்கிறது...
நா.முத்துக்குமார் அதற்கான வரிகளை கருந்தேனீரோடு
கொசுக் கடிக்க எழுதிக் கொண்டிருக்கிறார்...
யுவனின் இசையில் யுவனின் குரலில் எங்கள்
இரவு கழிந்து கொண்டிருக்கிறது...
உங்களின் “பேரன்பிற்கான வாழ்த்துக்களுக்கும்”,
புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும், மிக்க நன்றி
”தரமணி” யின் இசை விரைவிலும் , படம் கோடையிலும் வெளிவரும்............
பிரியங்களுடன்
ராம்...
காலை 3 மணி..
5 ஜனவரி 2016..

0 comments:

Post a Comment

slider


Cincopa trial has expired
Please upgrade to re-enable this video or gallery
Powered By Cincopa
 
Top