கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது!




சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளரானவர் யுவன்ஷங்கர்ராஜா. அதையடுத்து தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்தவர், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். இருப்பினும் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள பிரியாணி படத்தோடு 100 படங்களுக்கு இசையமைத்து விட்ட யுவன், ரஜினி-கமல் நடித்த ஒரு படத்துக்குகூட இசையமைக்கவில்லை. அதனால், அவருக்கு அது ஒரு மனக்குறையாகவே இருந்து வந்ததாம்.இந்த நிலையில், தற்போது லிங்குசாமி தயாரிப்பில் கமல் இயக்கி நடிக்கும் படத்துக்கு யுவன்தான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார். லிங்குசாமி கம்பெனி படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் யுவன்ஷங்கரை புக் பண்ணிவிட்டதாக அவர் கமலிடம் சொன்னபோது, யுவன் நல்ல இசையமைப்பாளர்தானே. அவருடன் பணியாற்றுவதில் எனக்கும் ரொம்ப சந்தோசம் என்று சொன்னாராம் கமல்.இதைக்கேட்டு புல்லரித்துப்போனாராம் யுவன்ஷங்கர்ராஜா. உடனடியாக கமலை சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார். அப்போது உன் தந்தை இளையராஜா ஒரு காலத்தில் எனக்கு பெரிய பெரிய ஹிட் பாடல்களையெல்லாம் கொடுத்தவர். பின்னர் கார்த்திக்ராஜாகூட காதலா காதலா படத்துக்கு இசையமைத்தவர். யுவன் மட்டும்தான் என் படத்துக்கு இன்னமும் இசையமைக்கவில்லை என்றொரு வருத்தம் எனக்கும் இருந்தது. அது இப்போது திருப்பதி பிரதர்ஸ் மூலம் தீர்ந்து விட்டது என்று சொன்னாராம் கமல். இதனால் உற்சாகத்தில் இருக்கும் யுவன்ஷங்கர், கமல் படத்துக்கு பிரமாண்டமான இசையை கொடுத்து அவர் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்று பரபரப்படைந்துள்ளாராம்.

0 comments:

Post a Comment

slider


Cincopa trial has expired
Please upgrade to re-enable this video or gallery
Powered By Cincopa
 
Top