Isaithalaivan lyrics:
வா உயிரிசைக் கடவுளின் குறையைத் தீர்க்கவே; 
இசைத்தலைவா உன் இசை பல இதயத்தைக் கோர்க்கவே!
பின்னணி இசை புதுமை செய்து, 
பூப்பூவாய் இதயத்தில் மிதக்குதே;
கீபோர்டு கீதம், க்ளாஸிக் ராகம்; 
புது ட்ரெண்டுடன் உலகெல்லாம் தெறிக்குதே!

விருதுகள் காணாது உன் இசைதானே; 
விருதுகளைத் தாண்டி நிற்கும் உன் படைதானே!
உனக்காக காத்திருக்கு பல இடம் தானே; 
இசைத்தலைவன் எங்களுக்கு நீ ஒருவன் தானே!

கீ போர்டின் கவிதையே; 
இசையில் ஓர் புதுமையே! 
ஒரு வார்த்தையே பல தோற்றத்தில் நீ மாற்றினாய் புதுமொழியாக தலைவா!
சிரிக்கின்ற சிம்ஃபொனி; 
என் தனிமைக்கு ஒரு கம்பெனி; 
என் தனிமையை வேறு துணையின்றி புது கூட்டமாய் உன் இசையால் நீ மாற்றினாய்!

காற்றைப் போல இசை காதில் வந்ததே;
காதல் பாடல் ஒன்று கேட்குதே!
ஊற்றைப்போல மனம் மாறிப்போனதே; 
நெஞ்சம் எங்கும் இசைப் பொங்குதே!

என்ன இது யார் இவன் என்று மனம் தேடுதே; 
இசைத்தலைவன் யுவன் என்று இவன் பெயர் சொல்லுதே!
விருதுகள் காணாது உன் இசைதானே; 
விருதுகளைத் தாண்டி நிற்கும் உன் படைதானே!!   

To download mp3





0 comments:

Post a Comment

slider

...
 
Top